பாலியல் புகார்: தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது!

பாலியல் புகார்: தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது!
பாலியல் புகார்: தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது!

இளம் பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் தேடப்பட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது பெண் துன்புறுத்தல் தடை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர், குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.

இவர்மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில் நான் பிரார்த்தனைக்காக சென்றேன். அப்போது பாதிரியார் என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததோடு, எனது உடலை மோசமாக தொட்டார்.

பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பினார். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்” என அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றலாகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைதளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்துவந்த ஆன்றோ, இன்று வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவில் அருகே பால்பண்ணை பகுதியில் வைத்து அவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com