\
காதலனை கொலை செய்த வழக்கு : போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன கர்ப்பிணி பெண்

காதலனை கொலை செய்த வழக்கு : போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன கர்ப்பிணி பெண்

காதலனை கொலை செய்த வழக்கு : போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன கர்ப்பிணி பெண்
Published on

காதலனை கொலை செய்த வழக்கில் கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் விசாரணை கைதி பிரசவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோடியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இவர் தனது முன்னாள் காதலருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம் அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆரணி நகர காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கிருஷ்ணவேணியை கடந்த 4-ம் தேதி கைது செய்து 7-ம் தேதி விசாரணை கைதியாக வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கர்ப்பிணியான கிருஷ்ணவேணி பிரசவ பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த கிருஷ்ணவேணி இன்று காலை தனது சிறை புடவையை மாற்றிக்கொண்டு திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறித்த சிறை துறை அளித்த புகாரின் பேரில், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய பெண் விசாரணை கைதியை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com