\
கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் மீது கம்பியால் தாக்குதல் - கன்னியாகுமரியில் பரபரப்பு

கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் மீது கம்பியால் தாக்குதல் - கன்னியாகுமரியில் பரபரப்பு

கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் மீது கம்பியால் தாக்குதல் - கன்னியாகுமரியில் பரபரப்பு
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே கர்ப்பிணி மற்றும் அவரது குடும்பத்தாரை கம்பியால் தாக்கிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாபுரத்தில் வசித்து வருபவர் கில்பர்ட் ராஜன். இவருக்கும், இவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரினுக்கும் இடையே நடைபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை காலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கில்பர்ட் ராஜன், அவரது கர்ப்பிணி மனைவி பிரதிஷா டேனி உள்ளிட்ட 4 பேரை ஏஞ்சல் சகாரின் தனது தம்பியுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், தக்கலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com