\
நள்ளிரவில் கொடூரம்: ஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்!

நள்ளிரவில் கொடூரம்: ஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்!

நள்ளிரவில் கொடூரம்: ஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்!
Published on

ஆபாச வீடியோ பார்த்துவிட்டு நள்ளிரவில் பெற்ற அம்மாவையே பாலியல் பலாத்காரம் செய்த கொடுமைக்கார மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது, பலன்பூர். இங்குள்ள படான் பகுதியை சேர்ந்தவர் ராகுல். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழக்கிழமை, இரவுவரை அலுவலகத்தில் பணிபுரிந்த இவர், நள்ளிரவு வீட்டுக் கு வந்தார். இரவு ஒரு மணி வரை, ஃபோனில் ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் கொண்டவர் ராகுல். அன்றைய தினமும் பார்த்துள்ளார். பிறகு தாய் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்றுள்ளார். தண்ணீர் குடிப்பது போல் குடித்தார். பிறகு தூங்கிக் கொண்டிருந்த தாயின் மீது, திடீரென்று பாய்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை எதிர்பார்க்காத அந்த தாய், அதிர்ச்சி அடைந்து கத்தினார். ஆனால் அம்மாவும் மகனும் சண்டை போடுவது வழக்கம் என்பதால் அக்கம் பக்கத் து வீட்டினர் இதைக் கண்டுகொள்ளவில்லை. 

இதையடுத்து ஊரில் இருக்கும் தனது கணவரிடம் தகவல் சொன்னார் அந்த தாய். அவரது மூத்த மகனின் ஆலோசனையின் பேரில் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த படான் போலீசார் அந்த கொடுமைக்கார மகனை கைது செய்துள்ளனர்.

இதுபற்றி படான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எஸ்.எம்.ரபாரி கூறும்போது, ‘ஆபாச வீடியோ பார்த்து அதற்கு அடிமையாகி யுள்ளார் ராகுல். அடிக்கடி தனது தங்கை மற்றும் அம்மா முன்பே வீடியோவை பார்த்துள்ளார். அம்மாவிடம் பலமுறை இப்படி தவறான முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். மகனின் இந்த செயலால், அந்த தாய் இப்போது மனநிலைப் பாதிக்கப் பட்டுள்ளார்’ என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com