\
விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கு - தொடங்கியது சிபிசிஐடி விசாரணை

விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கு - தொடங்கியது சிபிசிஐடி விசாரணை

விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கு - தொடங்கியது சிபிசிஐடி விசாரணை
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் கூறுகையில், “கோவை காவல்துறை கைது செய்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படும். விசாரணைக்கு பிறகு தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேர்மையாக விசாரணை நடைபெறும். சிபிசிஐடி எஸ்.பி நிஷா தலைமையில் தனிப்படை வழக்கை விசாரிக்கும். கோவை காவல்துறை கொடுத்த அனைத்து ஆவணங்களையும் விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com