\
பணிநேரத்தில் மதுக்கடையில் மது அருந்திய காவலர் - வைரல் வீடியோ

பணிநேரத்தில் மதுக்கடையில் மது அருந்திய காவலர் - வைரல் வீடியோ

பணிநேரத்தில் மதுக்கடையில் மது அருந்திய காவலர் - வைரல் வீடியோ
Published on

விருதுநகர் அருகே உள்ள மதுபானக் கடையில் பணியில் இருந்த காவலர் ஒருவர் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள மத்திய சேனை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் பணியில் இருந்த காவலர் ஒருவர் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கடையில் காவல் உடையுடனும், வாக்கிடாக்கியுடனும் அவர் மது அருந்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளிடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com