\
சென்னையில் கொடூரம்: மனைவியை அடித்துக் கொலைசெய்து மூட்டை கட்டிய கணவர்

சென்னையில் கொடூரம்: மனைவியை அடித்துக் கொலைசெய்து மூட்டை கட்டிய கணவர்

சென்னையில் கொடூரம்: மனைவியை அடித்துக் கொலைசெய்து மூட்டை கட்டிய கணவர்
Published on
சென்னையில் மனைவியை அடித்துக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீட்டிலேயே வைத்துவிட்டு தலைமறைவான கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஓட்டேரி ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் - வாணி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மதுபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்த ரமேஷ், திங்களன்று திடீரென வெளியூர் சென்றுள்ளார். தாயார் வாணியைக் காணாமல் மகன்கள் இருவரும் தேடித் திரிந்துள்ளனர். புதன்கிழமை அன்று காலை வீட்டில் துர்நாற்றம் வீசியதோடு, மேஜையின் கீழே இருந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ஓட்டேரி காவல்துறையினர், மூட்டையைப் பிரித்தபோது, உள்ளே ரத்தக்காயங்களுடன் வாணியின் உடல் இருந்ததைப் பார்த்துள்ளனர். உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர், தலைமறைவாகிய ரமேஷை தேடி வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com