குற்றம்
சித்ரா மரணம்: சக நடிகர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு
சித்ரா மரணம்: சக நடிகர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு
சின்னத்திரை நடிகை மரண விவகாரத்தில் சக நடிகர்- நடிகைகளை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சித்ராவின் கணவர் எனக்கூறப்படும் ஹேம்நாத்திடம் போலீசார் நேற்று காலை முதல் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நேற்று இரவு அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் இன்று ஆஜராகும்படிகூறி வீட்டிற்கு அனுப்பினர்.
இந்நிலையில், இன்று சித்ராவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், சக நடிகர் நடிகைகளிடமும், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.