யூடியூபில் பெண்களை ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் எங்கே? - மனைவி, தந்தையிடம் விசாரணை

யூடியூபில் பெண்களை ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் எங்கே? - மனைவி, தந்தையிடம் விசாரணை

யூடியூபில் பெண்களை ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் எங்கே? - மனைவி, தந்தையிடம் விசாரணை
Published on

பெண்களை ஆபாசமாக பேசிய யூ டியூபர் பப்ஜி மதனை தீவிரமாக தேடி வரும் சைபர் கிரைம் காவல்துறையினர், அவரது மனைவி மற்றும் தந்தையை சென்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையசேவை மூலம் பயன்படுத்தியது, விளையாட்டின்போது பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசியது என்பன உள்ளிட்ட புகார்கள் எழுந்ததை அடுத்து பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மதனை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், அவர் மீது இதுவரை 159 புகார்கள் வந்துள்ளன. எனவே மதன் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் காவல்துறையினர், சேலத்தில் இருந்து மதனின் மனைவியையும், தந்தையையும் சென்னை அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவில் நவீன தொழில்நுட்ப வசதிகொண்ட சைபர் ஆய்வகம் இருப்பதால், தொழில்நுட்ப உதவியுடன் தப்பிக்கும் மதனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com