\
போத்ராவை காவலில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு

போத்ராவை காவலில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு

போத்ராவை காவலில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு
Published on

கந்துவட்டிப் புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களை காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர். 

அவர்கள் மீது இன்னும் பல்வேறு புகார்கள் வந்துள்ள நிலையில், புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களை காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் ஐந்து நாள் போலீஸ் காவல் கோரப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு அனுமதி கிடைத்தால் பல மோசடி விவகாரங்கள் வெளியே தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கந்துவட்டி புகாரில் போத்ராவும், அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், போத்ரா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com