\
கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்கள்: ரோந்து வாகனத்திலேயே விசாரித்த போலீசார்;காரணம் இதுதான்

கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்கள்: ரோந்து வாகனத்திலேயே விசாரித்த போலீசார்;காரணம் இதுதான்

கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்கள்: ரோந்து வாகனத்திலேயே விசாரித்த போலீசார்;காரணம் இதுதான்
Published on

சென்னையில் கஞ்சா, மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை ரோந்து வாகனத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை பாடி மேம்பாலம் அருகே சிலர் பட்டாக்கத்தியுடன் அவ்வழியாக செல்பவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதாக கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் அங்கிருந்த 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் மூவரும் திருமுல்லைவாயல் பொத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (19), புழல் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(19) மற்றும் ஜோஷ்வா(17) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதேபோன்று, கொரட்டூர் ஏரி ஒண்டிவீரன் கோயில் அருகே கஞ்சா போதையில் சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் கோடம்பாக்கத்தை சேர்ந்த முகில்(16), வில்லிவாக்கம் கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்த கர்ணன்(17) ஆகிய இருவரை பிடித்த காவல்துறையினர் மொத்தம் 5 பேரை கொரட்டூர் போலீசார் காவல் ரோந்து வாகனத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்தில் காவல் நிலையம் அழைத்து வரபட்ட கைதி விக்னேஷ் காவல்நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து போலீசார் இரவு நேரங்களில் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச்செல்ல முடியாமல் தெரு தெருவாக சுற்றி வந்துள்ளனர். பின்னர் காலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com