\
திருமணமான 4 மாதத்தில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை - நாகரசம்பட்டி போலீசார் விசாரணை

திருமணமான 4 மாதத்தில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை - நாகரசம்பட்டி போலீசார் விசாரணை

திருமணமான 4 மாதத்தில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை - நாகரசம்பட்டி போலீசார் விசாரணை
Published on

திருமணமான 4 மாதத்தில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை கிராமத்தை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி பிரேம்குமார் (21) என்பவருக்கும் சூளகரி அடுத்த அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி கடந்த 4 மாதங்களாக பிரேம்குமாருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது குறித்தும், தற்கொலைக்கு காரணம் குறித்தும் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com