சென்னையில் +2 மாணவன் கடத்தல்; சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

சென்னையில் +2 மாணவன் கடத்தல்; சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை
சென்னையில் +2 மாணவன் கடத்தல்; சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் பள்ளி முடிந்து வெளியே வந்த +2 மாணவனை 5 பேர் கும்பல் காரில் கடத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி மாரியப்பன் என்பவரது மகன் கணேசன். இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடத்து செல்லும்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாணவனை கடத்தியது.


இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் காரை துரத்திச் சென்றனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் மாணவனின் அக்கா ஜனனிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பூபதி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கணவரை பிரிந்து இருப்பதாகவும், மனைவியின் குடும்பத்தினரை மிரட்டவே பூபதியுடன் மாணவனை கடத்த வந்ததாக பிடிபட்ட சந்தோஷ்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குடும்பத் தகராறு காரணமாக மாணவனை கடத்திச் சென்ற உறவினரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர். கடத்தப்பட்ட மாணவனை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பட்டப்பகலில் பள்ளி வாசலில் மாணவன் காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com