டெல்லி: ரூ.4 லட்சத்திற்கு குழந்தைகள் விற்பனை - பிடிபட்ட கும்பல்

டெல்லி: ரூ.4 லட்சத்திற்கு குழந்தைகள் விற்பனை - பிடிபட்ட கும்பல்

டெல்லி: ரூ.4 லட்சத்திற்கு குழந்தைகள் விற்பனை - பிடிபட்ட கும்பல்
டெல்லியில் ஏழை பெற்றோரிடம் இருந்து பிறந்த குழந்தைகளை வாங்கி அவற்றை 4 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து விற்ற கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது.
டெல்லியில் பிறந்த குழந்தைகள் விற்பனை அதிகளவில் நடப்பபதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் துறை விசாரணை நடத்தியது. இதில் ஏழை பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளை வாங்கி மகப்பேறு இல்லாத பணக்காரர்களுக்கு விற்கும் கும்பல் சிக்கியது. இவர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கொடுத்து குழந்தைகளை வாங்கி 3 முதல் 4 லட்சம் ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 10 குழந்தைகளின் அடையாளம் தெரிய வந்துள்ளதாகவும் இக்கும்பலிடம் இருந்து 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு ஆணையர் ராஜேஷ் தியோ தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com