சென்னை: மாத்திரைகளை கரைத்து போதை ஊசி - 4 பேர் கைது

சென்னை: மாத்திரைகளை கரைத்து போதை ஊசி - 4 பேர் கைது

சென்னை: மாத்திரைகளை கரைத்து போதை ஊசி - 4 பேர் கைது
Published on

போதை மாத்திரைகளை Sterile water-ல் கரைத்து வைத்துக் கொண்டு ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதையில் இருந்து வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தமிழக காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்ததில், போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், போதை மாத்திரைகளை Sterile water-ல் கரைத்து வைத்து கொண்டு ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதையில் இருந்து வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதில், சந்தோஷ் என்பவர், யுடியூப் மூலமாக இந்த முறையை அறிந்து கொண்டு இளைஞர்களுக்கு தெரிவித்து வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து கைதான நான்கு பேரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். வழக்கில் தலைமறைவாகியுள்ள மேலும் பலரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: அரசுப் பணியில் சேர தமிழக தேர்வுத்துறையின் போலி சான்றிதழ்... சிக்கிய வடமாநிலத்தவர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com