கத்தியில் குத்தப்பட்ட போதும் கொள்ளையர்களை துரத்திய காவலர்

கத்தியில் குத்தப்பட்ட போதும் கொள்ளையர்களை துரத்திய காவலர்

கத்தியில் குத்தப்பட்ட போதும் கொள்ளையர்களை துரத்திய காவலர்
Published on

சென்னையில் பெண்ணிடம் நகை ‌பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவலரைக் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்தவர் நாகமணி. தனது உறவினரை பார்க்க புரசைவாக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த‌ அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரிடமிருந்து 3 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்து விட்டுச் சென்றனர். அந்தத் தருணத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் விஜயகுமார், நகை ‌பறித்த இருவரையும் துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டார். காந்தி இர்வின் பாலம் அருகே மடக்கிய போது இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த நபர்‌ தான் கையில் வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த போதிலும், விஜயகுமார், ஒரு கொள்ளையனைப் பிடித்து வேப்பேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். 

காயமடைந்த போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமாரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் புதுப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், முகமது ஆரூண் ரஷீத் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது வேறு எங்கெல்லாம் வழக்கு உள்ளது? எங்கெல்லாம் நகை பறிப்பில் ஈடுபட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவதன்று தப்பியோடிய முகமது ஆருண் ரஷீத்-ஐ வேப்பேரி காவல்துறையினர் கைது செய்தனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com