கர்நாடகா : ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ வீடியோ மார்பிங் செய்த விவகாரத்தில் பத்திரிகையாளர் கைது

கர்நாடகா : ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ வீடியோ மார்பிங் செய்த விவகாரத்தில் பத்திரிகையாளர் கைது
கர்நாடகா : ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ வீடியோ மார்பிங் செய்த விவகாரத்தில் பத்திரிகையாளர் கைது

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சனிவாரசந்தே பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட மூவர் மீது வழக்கு வீடியோவை மார்பிங் செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் அந்த பகுதியை சேர்ந்த போலீசார். 

இஸ்லாமிய பெண் ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என சொல்லும் வகையில் வீடியோவை மார்பிங் செய்தது அவர்கள் மீது வழக்கு பாய காரணமாகி உள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பத்திரிகையாளரின் பெயர் ஹரிஷ் என தெரிவித்துள்ளனர் போலீசார். இந்த வழக்கில் உள்ளூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ரகு மற்றும் கிரிஷா என மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“அம்பேத்கர் ஜிந்தாபாத்” என அந்த இஸ்லாமிய பெண் முழக்கமிட்டதை “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என மாற்றியதோடு வாட்ஸ்-அப் செயலியில் அந்த வீடியோவை பகிர்ந்து, உள்ளூர் அளவில் ‘பந்த்’ நடத்துவதற்கான முயற்சிகளை குற்றம்சாட்டப்பட்ட மூவரும் மேற்கொண்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பாவி இஸ்லாமியர் ஒருவரை சனிவாரசந்தே காவல் நிலைய போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. அதையடுத்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு முன்னர் திரண்டு தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது அதில் பங்கேற்ற இஸ்லாமிய பெண் ஒருவர் ‘அம்பேத்கர் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டுள்ளார். 

சமூக அமைதிக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை தூண்டுதல் ஆகிய குற்றங்களின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com