குற்றம்
சென்னையில் உரிமம் இன்றி இயங்கிய 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களுக்கு சீல்
சென்னையில் உரிமம் இன்றி இயங்கிய 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களுக்கு சீல்
சென்னையில் உரிமம் பெறாமல் இயங்கிவந்த 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னையில் சில ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, 151 இடங்களில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், அண்ணா நகர், வடபழனி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் நடத்திய சோதனையில் 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் உரிமம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 43 சென்டர்களை மூடிய காவல்துறையினர், பாலியல் தொழில் நடத்தியதாக ஒரு வழக்குப்பதிவு செய்து, 5 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர். உரிமம் இன்றி இயங்கி வந்த 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.