குற்றம்
மதுரை: பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் கைது
மதுரை: பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் கைது
மதுரையில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொரோனாவால் வருமானம் இன்றி தவிக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த பாண்டியராஜா என்பவரிடம், காவல்துறையினர் வாடிக்கையாளர்போல் பேசியுள்ளனர்.
அப்போது குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு, பாண்டியராஜா கூறியுள்ளார். அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பாண்டியராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த சத்துணவு அமைப்பாளர் குணசேகரன் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்தனர்.