குற்றம்
ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டச் சென்ற 5 பேர் கைது
ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டச் சென்ற 5 பேர் கைது
ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டச் சென்ற 5 பேரை கைது செய்த திருத்தணி காவல்துறையினர், அவர்கள் சென்ற சொகுசு காரையும், அதிலிருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், திருத்தணியில் இருந்து ஆந்திரா நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு காரை மடக்கினர். ஓட்டுநர் காரைவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்ததால் சந்தேகமடைந்த காவலர்கள், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில், காரில் இருந்த 5 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பதி அருகே செம்மரம் வெட்டுவதற்காக, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கூலி பேசி அழைத்து வரப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், ஐந்துக்கும் மேற்பட்ட கத்திகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களுடன் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.