\
ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்காததால் எரித்துக் கொலை: 3 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் கைது

ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்காததால் எரித்துக் கொலை: 3 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் கைது

ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்காததால் எரித்துக் கொலை: 3 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் கைது
Published on
ராமநாதபுரத்தில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்காத நபரை கொலை செய்து எரித்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சாயல்குடியைச் சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காணாமல்போன நிலையில், அந்த ஆண்டே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கன்னிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரை பிடித்து விசாரித்தபோது, 20 சென்ட் இடத்தை எழுதி தருவதாகக் கூறி குணசேகரன் என்பவரிடம் முத்து முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதும், பின்னர் இடத்தை எழுதித் தராததோடு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், வேதமாணிக்கம் உள்ளிட்ட மூன்று பேருடன் சேர்ந்து முத்துவை காரில் கடத்தில் கொலை செய்து, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான குணசேகரன் கடந்த ஆண்டே புற்று நோயால் உயிரிழந்த நிலையில், வேதமாணிக்கம் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com