\
சென்னை அழைத்து வரப்பட்டார் முன்னாள் அமைச்சர்  மணிகண்டன்

சென்னை அழைத்து வரப்பட்டார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

சென்னை அழைத்து வரப்பட்டார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
Published on

பாலியல் புகார் வழக்கில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை அழைத்து வரப்பட்டார்.

நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. எந்த இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார் தற்பொழுது எங்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கின்ற தகவல்களை போலீசார் வெளியிடாத நிலையில், பெங்களூருவில் இருந்து மணிகண்டனை சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னை அழைத்துவரப்பட்டுள்ள அவரை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருந்த உதவியாளர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com