\
கே.எஸ்.அழகிரி, 3 காங்கிரஸ் எம்.பிக்கள் உட்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு

கே.எஸ்.அழகிரி, 3 காங்கிரஸ் எம்.பிக்கள் உட்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு

கே.எஸ்.அழகிரி, 3 காங்கிரஸ் எம்.பிக்கள் உட்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு
Published on: 

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் காரணமாக கே.எஸ்.அழகிரி, 3 காங். எம்பிக்கள் உள்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் அந்த மாநில கவர்னரை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்று நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 143 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்பிக்கள் எச்.வசந்தகுமார், ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத் உள்பட 143 பேர் மீது கிண்டி போலீசார் 143- சட்டவிரோதமாக கூடுதல், 151- கலைந்து போக சொல்லுயும் உத்தரவை மதிக்காமல் இருத்தல், 270- உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை அநேகமாக பரப்பக்கூடிய தீய எண்ணத்திலான செயல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com