\
சுகாதாரத்துறை அதிகாரி கொடுத்த புகார்: சூர்யா தேவி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சுகாதாரத்துறை அதிகாரி கொடுத்த புகார்: சூர்யா தேவி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சுகாதாரத்துறை அதிகாரி கொடுத்த புகார்: சூர்யா தேவி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
Published on

நடிகை வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி விடுவிக்கப்ப்டட சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தலைமறைவாகி உள்ளதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தொற்றுநோய் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை வனிதா கொடுத்த புகாரின்பேரில், சூர்யா தேவி என்பவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அவரது இல்லத்திற்கு சுகாதாரத் துறையினர் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து சுகாதார ஆய்வாளர் ரமேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சூர்யா தேவி மீது பேரிடர் மேலாண்மை சட்டம், உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com