மன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது !

மன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது !

மன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது !
Published on

மன்னார்குடி வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த 7ம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது. பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் வரதராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “இந்த கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மரியசெல்வம் என்பவரை போலீசார் முதலில் கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், சுடலைமணி, மீரான் மொய்தீன் என்ற மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார்கள்” என்றார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி, போலி துப்பாக்கி மற்றும் ரூ. 2.58 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com