போலீஸ் பூத்தில் டிவி திருட்டு : வீட்டில் படம் பார்க்கும்போது பிடிபட்ட திருடன்

போலீஸ் பூத்தில் டிவி திருட்டு : வீட்டில் படம் பார்க்கும்போது பிடிபட்ட திருடன்

போலீஸ் பூத்தில் டிவி திருட்டு : வீட்டில் படம் பார்க்கும்போது பிடிபட்ட திருடன்
Published on

சென்னையில் காவல் உதவி மையம் சிசிடிவி கேமராவுக்கான டிவியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தரமணி, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகே காவல் உதவி மையம் அமைந்துள்ளது. இதில் தலைமைக் காவலர் சேகர் இரவுப் பணியில் இருந்துள்ளார். இயற்கை உபாதையை கழிக்க அவர் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் காவல் உதவி மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கண்காணிக்கும் டிவியை திருடி சென்றுள்ளனர். தகவலறிந்த தரமணி போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவியில் பதிவாகியுள்ள நபர் ஏற்கெனவே அடையார் பகுதியில் கடந்த மாதம் உணவகம் ஒன்றில் டிவியை திருடியவர் என்ற தகவல் தெரியவந்தது. அதனடிப்படையில் இரவுப்பணியில் இருந்த திருவான்மியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புகரசன் தலைமையிலான போலீசார், கண்ணகி நகர் சென்று கெளதம் (30) என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து டிவியை பறிமுதல் செய்தனர். 

அவர்கள் கைது செய்யும் போது கெளதம், திருடிய டிவியில் வீட்டில் படம் பார்த்து கொண்டிருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு இருசக்கர வாகனம் கொடுத்து உதவிய அவரது நண்பர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் கெளதம் எனபவர் மீது கஞ்சா வழக்கு உட்பட் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com