பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழித்த காவலர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழித்த காவலர் மீது தாக்குதல்: 4 பேர் கைது
பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழித்த காவலர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கச் சென்ற குணசேகரன் என்ற காவலரை தாக்கியதாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தனிபிரிவு தலைமை காவலராக பணிபுரிபவர் குணசேகரன். இவர் இரவு பணிக்காக வேலூர் செல்வதற்கு ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது, பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதை தட்டி கேட்ட கடையின் உரிமையாளர் சந்திரன் மற்றும் தனிபிரிவு தலைமை காவலர் குணசேகரன் இடையே அப்போது மோதல் ஏற்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஒட்டுநர்கள் 3 பேர் கடை உரிமையாளருக்கு ஆதரவாக காவலரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காவலர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் 3 பேர் உட்பட 4 பேரை கைது செய்து 4 ஆட்டோகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com