‘என்னை காப்பாற்றலயேனு பழிவாங்க கொள்ளையடிச்சேன்’ - குற்றவாளியின் வாக்குமூலம்

‘என்னை காப்பாற்றலயேனு பழிவாங்க கொள்ளையடிச்சேன்’ - குற்றவாளியின் வாக்குமூலம்
‘என்னை காப்பாற்றலயேனு பழிவாங்க கொள்ளையடிச்சேன்’ - குற்றவாளியின் வாக்குமூலம்

சென்னையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீஸார் 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வரும் ‌அய்யாசாமி, மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மளிகைப் பொருட்களை விநியோகித்து வருகிறார். அவற்றின் வாயிலாக கிடைத்த பணத்துடன் ஓட்டுநர் ஹயார் பாஷா, சரக்கு‌வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஜாஃபர்கான்பேட்டை காசி திரையரங்‌கம் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஹயார் பாஷா வந்த வாகனத்தை வழிமறித்தது.

அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், வாகனத்தின் சாவியை பறித்து‌, அவர் வைத்திருந்த 10 லட்சத்து 8 ‌ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறை விசாரணையை தொடங்கியது. கொள்ளையர்கள் வந்த வாகனங்களின் பதிவெண்களை வைத்து விசாரணை நடத்தியபோது, சுரேஷ்குமார் என்பவருக்கு வழிப்பறியில் தொடர்பு இருப்பதை காவல்துறை கண்டறிந்தது.

தொடர் விசாரணையில் சுரேஷ்குமாரும், அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேர் காஞ்சிபுரத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட காவல்துறை, உடனடியாக அங்கு விரைந்து 5 பேரையும் கைது செய்தனர். வழிப்பறி நடந்த 12 ‌மணி நேரத்திற்குள் அவர்கள் காவல்துறையிடம் சிக்கினர். இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ்குமார், பல்பொருள் அங்காடி உரிமையாளர் அய்யாசாமியின் கடையில் பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்தது.

சிறிது காலத்திற்கு முன் அய்யாசாமியின் வாகனத்தில்‌, தடை செய்யப்பட்ட சில பொருட்களை கொண்டு சென்றபோது சுரேஷ்குமார் காவல்துறையில் சிக்கியதாகவும், அவரை காப்பாற்ற அய்யாசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கவே, சுரேஷ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அய்யாசாமிக்குச் சொந்தமான பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு வேறு ஏதேனும் ‌கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா என‌ காவல்துறை விசாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com