புதுக்கோட்டையில் ஆடு திருடும் கும்பல் கைது: 7 ஆடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டையில் ஆடு திருடும் கும்பல் கைது: 7 ஆடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டையில் ஆடு திருடும் கும்பல் கைது: 7 ஆடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏழு ஆடுகளை காப்பாற்றி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்பு சில மாதங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருட்டு சம்பவங்கள் குறைந்து இருந்தது. இச்சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஆடு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அன்னவாசல் அருகே உள்ள புதூரை  சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற விவசாயின் வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகள் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்  அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது போலீசாரை கண்டதும் சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த 4 பேர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த போலீசார் 3 பேரை புதூர் அருகே வைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருமலைக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (20), பரம்பூர் வண்ணாரப்பட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் பாலகுமார் (20), திருப்பத்தூர் கே.புதுப்பட்டியை சேர்ந்த சக்தி (21) என்பதும் இவர்கள் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறு திருட்டில் ஈடுபட்ட வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்களிடம் இருந்து அப்பகுதியில் திருடப்பட்ட 7 ஆடுகளை மீட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ரமேஷ், பாலகுமார், சக்தி ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்த போலீசார் தப்பி ஓடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: தருமபுரி: ரூ.1 கோடி பணம் கேட்டு மாணவனை கடத்திய 7 பேர் கொண்ட கும்பல் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com