மதுரை அருகே சமயநல்லூரில் கஞ்சா விற்பனை செய்த காவலர் கைது
மதுரை அருகே கஞ்சா விற்பனை செய்த காவலரை கைது செய்து அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும் கஞ்சா விற்கப்படுவதாகவும் சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் சமயநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் பிரவீன் (26) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக பிரவீனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன் 2014ம் ஆண்டில் வழிப்பறி வழக்கில் பணியிடை நீக்கம் செய்யபட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.