\
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோவில் கைது

ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோவில் கைது

ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோவில் கைது
Published on: 

மதுராந்தகம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (34). இவர், சென்னை மவுண்டில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பணி முடித்து வீடு திரும்புவதற்காக மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் முதுகரைக்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்தில் இவருக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக தெரியவருகிறது. இதுகுறித்து பள்ளி மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் சதீஷ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com