ஆலந்தூர்: பெட்ரோல் குண்டு வீச்சு... மூவருக்கு அரிவாள் வெட்டு! 19 பேரை கைது செய்த போலீஸ்!

ஆலந்தூர்: பெட்ரோல் குண்டு வீச்சு... மூவருக்கு அரிவாள் வெட்டு! 19 பேரை கைது செய்த போலீஸ்!
ஆலந்தூர்: பெட்ரோல் குண்டு வீச்சு... மூவருக்கு அரிவாள் வெட்டு! 19 பேரை கைது செய்த போலீஸ்!

ஆலந்தூரில் 20 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் மூவரை வெட்டியுள்ளனர். இந்த வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ராபின் என்பட்வர் சொன்னதால் இச்செயலில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 9 மணியளவில், சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டினர். பின்னர் அந்த தெருவில் கடைசியில் சித்தர் கோயில் சுற்றி புதர்மண்டி காலி இடம் உள்ளது, அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஓடவே, அந்தக் கும்பல் `நாங்க தான் இங்க பெரிய ரவுடி’ என கத்திக் கொண்டே கையில் இருந்த கத்தியால் அந்த தெருவில் நின்று கொண்டுந்த நவீன் (31), ஷபீக் (22), அபுபக்கர் (19 ஆகிய மூன்று பேரை தலையில் வெட்டிவிட்டு, தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அங்கிருந்த பெண்கள் சிலர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக குவிக்கப்பட்டனர்.

பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பதற்றத்தை தவிர்க்க பரங்கி மலை துணை ஆணையர், அடையார் துணை ஆணையர், மடிப்பாக்கம் உதவி ஆணையர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். தலையில் வெட்டுக்காயத்துடன் மூவரையும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள பாலாஜி மருத்துவமமையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமத்தித்தனர்.

இதில் நவீன் மற்றும் அபுபக்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷபீக்கிற்கு, ரூ.19,500 மருத்துவ கட்டணம் அவரது உறவினர்களால் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மருந்துவ செலவாக 6,500 ரூபாய் ஷபீக்கிற்கு கட்ட வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறியதால் அவரது உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதன்பின் தப்பியோடிய நபர்கள் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் எதற்காக வந்தார்கள் எனவும் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு தெரியவந்திருக்கிறது. 

இதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பதிவான வழக்கில், 19 பேரை கைது செய்துள்ளது காவல் நிலையம். அவர்களிடம் விசாரித்தும் வருகின்றனர். அதில் மணிகண்டன் என்பவர் தலைமையில் 20 பேர் வந்ததாகவும், ராபினின் உறவினர் சஞ்சய் என்பவர் உட்பட 19 பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். ராபின் அங்கு சென்று மிரட்டி அச்சுறுத்த சொன்னதாக கூறியதின் பேரில் 20 பேர் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்போது பிடிபட்ட நபர்கள் மீது முன் வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com