ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: சிபிசிஐடி அதிரடி
புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் சென்னையை சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவனும் கூட்டாளியும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டனர்.
புதுச்சேரி, தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டு பயன்படுத்தவர்களின் தகவல்களை நூதன முறையில் திருடி, ஸ்வைப் மிஷின் மூலம் பல லட்சங்கள் பணத்தை கொள்ளை அடித்த கொள்ளை கும்பல் தலைவன் பாலாஜி மற்றும் அவனது கூட்டாளி ஜெயசந்திரனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யபட்ட தலைவன் பாலாஜி மற்றும் அவனது கூட்டாளி ஜெயசந்திரனை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட 10 ஸ்வைப் மிஷினை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாலாஜிக்கு ஸ்வைப் மிஷின் சப்ளை செய்து வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கமல், ஷியாம் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் இன்று காலை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.