\
பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது
Published on

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் விளம்பர நிறுவன அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நெட்வொர்க் மேலாளராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், அதில் நெட்வொர்க் அலுவலகத்தை நடத்தி வரும் சிரஞ்சீவி, தமக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும் தமக்கு இரண்டு மாதம் சம்பள பாக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் நீலாங்கரையைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து நிருபருக்கான போலி அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com