\
சென்னை: போட்டோ ஸ்டுடியோ கம்ப்யூட்டரை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டும் மர்ம நபர்

சென்னை: போட்டோ ஸ்டுடியோ கம்ப்யூட்டரை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டும் மர்ம நபர்

சென்னை: போட்டோ ஸ்டுடியோ கம்ப்யூட்டரை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டும் மர்ம நபர்
Published on

போட்டோ ஸ்டுடியோ கம்ப்யூட்டரை ஹேக் செய்து அமெரிக்க டாலர்களை கேட்டு மிரட்டும் நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் பிளவர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் திவாகர். இவர் அரும்பாக்கம் ஜெகநாதன் நகர் மெயின் ரோட்டில் நாவல்டி பிலிம்ஸ் ஸ்டுடியோ ஒன்றை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் திவாகர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், "கடந்த மே மாதம் 15-ம் தேதி எனது கம்ப்யூட்டர் அடையாளம் தெரியாத நபரால் ஹேக் செய்யப்பட்டது. கம்ப்யூட்டரில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அடையாளம் தெரியாத நபர் முடக்கி விட்டார்.

பிறகு helpmanager@air mail.com இமெயில் முகவரியில் இருந்து எனக்கு குறுஞ்செய்தி மூலம் போட்டோக்கள் வீடியோக்கள் வேண்டும் என்றால் 980 அமெரிக்க டாலர் (ரூபாய் மதிப்பில் 73,500) தர வேண்டும் என மிரட்டி உள்ளார்” என புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறை சைபர் பிரிவு போலீசார் உதவியுடன் அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வரும் திவாகர் தான் எடுத்த திருமண நிகழ்ச்சிகளின் படங்கள், வீடியோக்களை ஹேக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com