திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உறவினர் மீது போக்சோ வழக்கு

திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உறவினர் மீது போக்சோ வழக்கு

திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உறவினர் மீது போக்சோ வழக்கு
Published on

குடவாசல் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி, தனது தாத்தா பாட்டியுடன் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் மாமா திருமாவளவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து, திருமாவளவன் அந்த சிறுமியை அழைத்துச் சென்று அருகில் உள்ள கோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சிறுமி மற்றும் அவரது தாயார் மீது நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருமாவளவனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com