மதுரையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் பொடா சுரேஷை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கின்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவலுக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு எதிராகவும் அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக பொடா சுரேஷின்மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பொடா சுரேஷை சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மதுரையில் மடக்கி கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் காவல்துறைக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

