\
இருவரை காதலித்து ஒருவரை திருமணம் செய்த கர்ப்பிணி கொடூர கொலை!

இருவரை காதலித்து ஒருவரை திருமணம் செய்த கர்ப்பிணி கொடூர கொலை!

இருவரை காதலித்து ஒருவரை திருமணம் செய்த கர்ப்பிணி கொடூர கொலை!
Published on

ஈரோடு அருகே 4 மாத கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி - பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், உயிரிழந்த பிருந்தா, திருமணத்திற்கு முன்பு இருவரை காதலித்து வந்ததாகவும். அதில், ஒருவரை திருமணம் செய்த நிலையில் மற்றொருவருடன் காதலை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் கார்த்தி வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த காதலன் அரவிந்த், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிருந்தாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அரவிந்த் பிருந்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சென்னை தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், காதலன் அரவிந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com