\
திருவண்ணாமலை: சிறப்பு துணை காவல் ஆய்வாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

திருவண்ணாமலை: சிறப்பு துணை காவல் ஆய்வாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

திருவண்ணாமலை: சிறப்பு துணை காவல் ஆய்வாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு
Published on

திருவண்ணாமலையில் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சுந்தர் வீட்டில் காரின் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சுந்தர். இவருக்கு சொந்தமான வீடு திருவண்ணாமலை மத்தளாங்குல தெருவில் உள்ளது. அந்த வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது சுந்தரின் இரண்டாவது மனைவியான சுமதி என்பவர் குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவு பெட்ரோலை ஊற்றி கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை எரித்துவிட்டு சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து சுமதி என்பவரை கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com