குற்றம்
மேலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசியதோடு, கத்தி, அரிவாளுடன் மிரட்டல் - மதுரையில் பரபரப்பு
மேலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசியதோடு, கத்தி, அரிவாளுடன் மிரட்டல் - மதுரையில் பரபரப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுண்ணாம்பூரில், நேற்றிரவு 11 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சுண்ணாம்பூரை சேர்ந்த குமார் என்பவரின் வீடு மற்றும் மந்தையில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசி அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுண்ணாம்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கும், மதுரையை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நள்ளிரவில் நந்தகுமார் உள்ளிட்ட 6 பேர் பெட்ரோல் குண்டு வீசியதாக குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.