Accused
Accusedpt desk

தென்காசி | புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது – எஸ்பி எச்சரிக்கை

புளியங்குடி காவல் நிலையத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணிற்கும் போன் செய்த மர்ம நபர், புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

Police station
Police stationpt desk

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் இருந்து செல்போன் மூலமாக மிரட்டல் விடுத்த தலைவன் கோட்டை மெயின் ரோடு பூசை பாண்டி என்பவரின் மகன் வெள்ளத்துரை (32) என்பவரை புளியங்குடி காவல் துறையினர் உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Accused
கூடலூர்: புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது

இது போன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com