\
கள்ளக்குறிச்சி: இட்லி சாப்பிட மறுத்த தாயில்லா குழந்தையை அடித்தே கொன்ற பெரியம்மா...!

கள்ளக்குறிச்சி: இட்லி சாப்பிட மறுத்த தாயில்லா குழந்தையை அடித்தே கொன்ற பெரியம்மா...!

கள்ளக்குறிச்சி: இட்லி சாப்பிட மறுத்த தாயில்லா குழந்தையை அடித்தே கொன்ற பெரியம்மா...!
Published on

இட்லி சாப்பிட மறுத்த ஐந்து வயது பெண் குழந்தையை அடித்துக் கொன்ற பெரியம்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேலவிழி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ. இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 5 வயதில் ரென்சிமேரி என்கிற குழந்தை இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ரோசாரியோ வேறொரு திருமணம் செய்துகொண்டார்.


ஜெயராணியின் மகளை அவளது சகோதரி ஆரோக்கியமேரி வளர்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு ஆரோக்கியமேரி இட்லி கொடுத்துள்ளார். ஆனால் அதை சாப்பிட மறுத்த குழந்தை பக்கத்து வீட்டுக்கு ஓடிவிட்டது. இதனை அறிந்த ஆரோக்கியமேரி, குழந்தையை ரோட்டில் போட்டு அடித்து மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்து கட்டையால் தாக்கி உள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர், கதவை திறந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து தியாகதுருகம் போலீசார் ஆரோக்கியமேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com