\
பெரியகுளம்: நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கையை துண்டித்த கணவர் கைது

பெரியகுளம்: நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கையை துண்டித்த கணவர் கைது

பெரியகுளம்: நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கையை துண்டித்த கணவர் கைது
Published on

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கையை அரிவாளால் வெட்டித் துண்டித்த கணவவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்ன முத்து (45). தென்னை மரம் ஏறும் கூலித் தொழிலாளியான இவருக்கும், நாகஜோதி (40) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நாகஜோதிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி, தேங்காய் வெட்டும் அரிவாளால் நாகஜோதியின் வலது கையை வேட்டியுள்ளார். இதில், நாகஜோதியின் கை மணிகட்டிற்கு கீழ் துண்டாகியது.

இதனைத் தொடர்ந்து பக்கத்தில் இருந்தவர்கள் கை துண்டிக்கப்பட்ட நாகஜோதியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் சின்ன முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com