\
’வீட்டுச்செலவிற்கு பணம் தரவில்லை’ - குடிபோதையில் தந்தையை கடப்பாரையால் குத்திக்கொன்ற மகன்.!

’வீட்டுச்செலவிற்கு பணம் தரவில்லை’ - குடிபோதையில் தந்தையை கடப்பாரையால் குத்திக்கொன்ற மகன்.!

’வீட்டுச்செலவிற்கு பணம் தரவில்லை’ - குடிபோதையில் தந்தையை கடப்பாரையால் குத்திக்கொன்ற மகன்.!
Published on

பெரம்பலூர் அருகே குடிபோதையில் தந்தையை கடப்பாரையால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி (55). இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவரின் பெரிய மகன் சதீஸ்குமார் கொத்தனார் வேலை செய்துவருகிறார். சதீஸ்குமார் எப்பொழுதும் குடிபோதையில் இருந்து வந்ததாகவும் வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த சதீஷ்குமார் ஆத்திரமடைந்து தந்தையை கடப்பாரையால் குத்தி கொலைசெய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலிஸார் சதீஸ்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com