குற்றம்
ஓடும் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை முயற்சி: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
ஓடும் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை முயற்சி: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில், ஓடும் ரயிலில் பெண்ணின் நகையை பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையனை பிடித்து, பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
செங்கோட்டையில் இருந்து மதுரை சென்ற ரயிலில், மதுரை விளாங்குடியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணின் 5 சவரன் தங்க நகையை பறித்த இளைஞர் ஒருவர், திருத்தங்கல் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது தப்பியோடியுள்ளார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். விசாரணையில், அவர் திருத்தங்கலை சேர்ந்த முனியசாமி என்பது தெரியவந்தது. அவரிடம் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

