ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு – 3 சகோதரர்கள் உட்பட 8 பேர் கைது

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு – 3 சகோதரர்கள் உட்பட 8 பேர் கைது
ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு – 3 சகோதரர்கள் உட்பட 8 பேர் கைது

மணிமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45), மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த இவர், ராகவேந்திரா நகர் பாலம் அருகே இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் முகமது சதாம் உசேன் (25), முகமது இம்ரான்கான் (21), முகமது ரியாசுதீன் (27), தனுஷ் (26), மணிமாறன் (25), அகமது பாஷா (21), மோகன்ராஜ் (20) சகோதரர்கள் மூவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் மணிமங்கலம் பகுதியில் நடந்த இரட்டை கொலைக்கு பின்னால் இருந்து மூளையாக வெங்கடேசன் செயல்பட்டதால் கொலை செய்ததாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com