பாலாற்றில் வெள்ளம்: 11 ஆயிரம் வாத்துகள் பரிதாபமாக உயிரிழப்பு

பாலாற்றில் வெள்ளம்: 11 ஆயிரம் வாத்துகள் பரிதாபமாக உயிரிழப்பு

பாலாற்றில் வெள்ளம்: 11 ஆயிரம் வாத்துகள் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

ஆம்பூர் அருகே பாலாற்று படுகையில் வளர்க்கப்பட்டு வந்த 11 ஆயிரம் வாத்துகள் உயிரிழந்துள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியகொமேஸ்வரம் பகுதி மற்றும் வேலூர் மாவட்டம் ரெட்டி மாங்குப்பம் பகுதிகளை இணைக்கக் கூடியது பாலாறு படுகை. இதன் ஓரமாக  பேர்ணாம்பட்டு அடுத்த மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் தனது குடும்பத்துடன் கொட்டகை அமைத்து சுமார் 12 ஆயிரம் வாத்துகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தல பள்ளி பகுதியில் உள்ள மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இவர்கள் வசித்து வந்த பகுதியில் திடீரென வெள்ள நீர் புகுந்தது. இதில் சிக்கிய சுமார் 11,000 வாத்துகள் உயிரிழந்தன.
மீதமுள்ள வாத்துக்களை காப்பாற்றி மீட்டு வைத்துள்ளனர். ஆனால் 2 மாவட்ட அதிகாரிகளும் தற்போதுவரை சம்பவ இடத்திற்கு வரவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com