தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை தீவிரப்படுத்த உத்தரவு - டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை
தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து மதுரையில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
கடந்த 10 நாட்களில் தென்மாவட்டங்களில் 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் சுமார் 2 மணி நேரம் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டார். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்வதுடன் தனிப்படைகளை அமைத்து குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டார்.
3 நாட்களில் ஆப்பரேஷன் டிஸ் ஆர்ம் என்ற தேடுதல் வேட்டையின் மூலம் 2 ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு 934 கத்திகள் மற்றும் 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஆலோசனை கூட்டத்தின்போது டிஜிபி சைலோந்திரபாபு குறிப்பிட்டார். மேலும், ஆயிரத்து 927 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.