ஒரகடம்: தனியார் நிறுவனத்தின் இரவு உணவில் சுண்ணாம்புக்கல்... மயங்கி விழுந்த தொழிலாளர்கள்!

ஒரகடம்: தனியார் நிறுவனத்தின் இரவு உணவில் சுண்ணாம்புக்கல்... மயங்கி விழுந்த தொழிலாளர்கள்!
ஒரகடம்: தனியார் நிறுவனத்தின் இரவு உணவில் சுண்ணாம்புக்கல்... மயங்கி விழுந்த தொழிலாளர்கள்!

ஒரகடம் சிப்காட்டில் ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்ட பத்து ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் என்ற கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்டோர்  பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தில் செகண்ட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் 8 மணி அளவில் இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது முதலில் உணவருந்திய 10 பேருக்கு மட்டும் வாந்தி மற்றும் மயக்கம் அடைந்துள்ளனர். அந்த 10  தொழிலாளர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது உணவை ஆய்வு செய்த போது பெரிய சுண்ணாம்புக்கல் ஒன்று இருந்ததை கண்டறிந்தனர். இதனால் நிறுவனத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதை கண்டு தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மற்ற தொழிலாளர்களை சாப்பிட மறுத்தூள்ளனர். 10 பேரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த உணவை சாப்பிடாத 150 க்கும் மேற்பட்டோருக்கு வேறு உணவுகள் வர வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பின் அதை சாப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com