‘பார்சல் பிரியாணியில் கறி இல்லை’ கேஷியரை தாக்கியதாக ஒருவர் கைது; இருவர் தலைமறைவு

‘பார்சல் பிரியாணியில் கறி இல்லை’ கேஷியரை தாக்கியதாக ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
‘பார்சல் பிரியாணியில் கறி இல்லை’ கேஷியரை தாக்கியதாக ஒருவர் கைது; இருவர் தலைமறைவு

சென்னை பெரியமேட்டில் பார்சல் பிரியாணியில் கறி அதிகமாக வைக்கவில்லை என்று கேஷியரை கரண்டியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை பெரியமேடு ஊத்துக்காட்டான் தெருவில் பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் கடையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்.

இந்நிலையில் பெரியமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரபீக், சலீம் மற்றும் குல்லா என்ற சண்முகம் ஆகியோர் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கும்போது பார்சலில் அதிகமாக பிரியாணி மற்றும் கறி இல்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு கேஷியர் விக்னேஷை கரண்டியால் தாக்கியுள்ளனர். இந்த காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவானது.

இது தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் ரபீகை கைது செய்த பெரியமேடு போலீசார், தலைமறைவாக உள்ள சலீம், சண்முகம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com